Tamil News
மனைவிக்கு 3 மாடியில் வீடு; கள்ளக்காதலிக்கு சொகுசு கார்; உல்லாசமாக வாழ்ந்து வந்த சலூன் கடைக்காரருக்கு நேர்ந்த சோகம்..!!
மனைவிக்கு 3-மாடி பங்களா வீடு, கள்ளக் காதலியுடன் சொகுசு காரில் இன்ப சுற்றுலா என வலம் வந்த முடி திருத்தும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்.
இவர் சித்திரங்குடி பகுதியில் நகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இவரது அடகு கடைக்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.
தன்னை காவியா என்று அறிமுகப்படுத்தியதோடு 9-கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுச் சென்றுள்ளார்.
மாலை கடைக்கு வந்த சுரேஷ் அடகுக்கு வாங்கிய நகைகளைச் சரிபார்த்த போது 1-வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால் அதைச் சோதித்த போது அது போலியான வளையல் என்பதை அவர் உறுதி செய்து யார் அந்த நகையை அடகுக்கு வைத்தது என்பதனை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, காவியா என்ற பெண் ஏமாற்றி அடகு வைத்ததைக் கண்டுபிடித்துள்ளார்.
உடனடியாக, சுரேஷ் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஒரு சொகுசு காரில், ஒரு ஆணுடன் வந்து இறங்கிய அந்த இளம் பெண் அந்த போலி நகையை அடகு வைத்துச் சென்றதை உறுதி செய்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குச் சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி, காரை ஓட்டி வந்த அந்த நபரிடம் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அவர் நாகர்கோவில் செட்டி குளம் பகுதியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசு ராஜா என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
செட்டி குளம் பகுதியில் சலூண் கடை நடத்தி வரும் ஜேசு ராஜாவுக்கு 1 மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், வீடு கார் எனச் சொகுசாக வாழ விரும்பியுள்ளார்.
ஆனால், அவருக்கு சலூன் கடை வருமானம் போதுமானதாக இல்லாததால், குறுக்கு வழியில் கோடீஸ்வரனாகத் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கணவனை இழந்து 2-குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்த செட்டி குளம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அனுஷா என்பவருடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் ஜேசு ராஜா.
அவருடன் சேர்ந்து, கேரளாவிலிருந்து கவரிங் நகைகளை வாங்கி சிறிய நகை அடகு பிடிக்கும் கடைகளைக் குறி வைத்து ஏமாற்றி பணம் ஈட்டி வந்துள்ளனர்.
இந்த பணத்தை வைத்து மனைவிக்கு 3-மாடியில் பங்களா வீடும், தனக்குச் சொகுசு கார் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில்தான் அவர் பல நகை அடகுக் கடைகளில் இப்படி ஏமாற்றியுள்ளதாகவும், தற்போது தான் மாட்டிக்கொண்டதாகவும் காவல்துறையில் வாக்குமூலம் தந்துள்ளார்.
இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறை ஜேசு ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் அவரது கள்ளக் காதலி அனுஷாவைத் தேடி வருகின்றனர்.
