Connect with us

    ஒட்டகத்தை வைத்து ஆற்றில் மணல் திருடிய நபரை ஒட்டகத்துடன் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார்; ஒட்டகத்தை பராமரிக்க முடியாமல் திருப்பி அனுப்பிய பரிதாபம்..!

    Camel

    Tamil News

    ஒட்டகத்தை வைத்து ஆற்றில் மணல் திருடிய நபரை ஒட்டகத்துடன் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார்; ஒட்டகத்தை பராமரிக்க முடியாமல் திருப்பி அனுப்பிய பரிதாபம்..!

    சிவகங்கை அருகே ஒட்டகத்தை வைத்து ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

    Camel

    சிவகங்கை மாவட்டம்,மறவமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர் .

    அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி வருவதை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.

    சோதனை செய்த போது நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வண்டியில் வந்தவரை கைது செய்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தற்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரனையில் அவர் சிவகங்கை மாவட்டம், பல்லாக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பது தெரிய வந்தது.

    சவுதி அரேபியாவில் பணிபுரிந்த அவர் கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    ஊருக்கு வந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மணல் பரப்பில் லோடு இழுக்க மாடுகள் சற்று திணற, ஒட்டகத்தை வைத்து மணல் கடத்த முடிவு செய்திருக்கிறார்.

    இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார்.

    அந்த ஒட்டகத்தை டயர் வண்டியை இழுக்க வைத்து, ஆற்று மணலைக் கடத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில்தான், இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, சரவணன் ஒட்டகத்தை வைத்து மணல் கடத்தியதைக் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து டயர்வண்டியையும், ஒட்டகத்தையும் பறிமுதல் செய்த போலீஸார் மறவமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    ஒட்டகத்தைப் பராமரிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட, ஒட்டகத்தை அதன் உரிமையாளரிடமே ஒப்படைத்திருக்கின்றனர்

    தாங்கள் அழைக்கும் போது ஒட்டகத்துடன் காவல் நிலையம் வர வேண்டும் என எச்சரித்து அனுப்பினர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!