Connect with us

    வாகன ஷோரூமில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுத்த மேனேஜர்; அதிர்ச்சியில் அப்பெண் செய்த காரியம்..!

    Lip kiss

    Tamil News

    வாகன ஷோரூமில் பணிபுரியும் இளம்பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுத்த மேனேஜர்; அதிர்ச்சியில் அப்பெண் செய்த காரியம்..!

    வாகன ஷோரூமில் வேலை செய்த பெண்ணுக்கு உதட்டில் லிப் கிஸ் கொடுத்த மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    Lip kiss

    இது பற்றிய விபரம் வருமாறு.

    சென்னை அண்ணாநகரில் ஒரு தனியார் வாகன ஷோ ரூம் இயங்கி வருகிறது.

    இங்கு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார்.

    அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

    நான் அம்பத்தூர் நான்காவது அவென்யூவில் உள்ள தனியார் வாகன ஷோரூமில் பணியாற்றுகிறேன்.

    கடந்த 23ம் தேதி, ஷோரூம் மேலாளர் ராஜா என்பவர், என்னிடம் ஆபாசமாக பேசினார்.

    பின் என்னிடம் நெருங்கி வந்து எனது உதட்டில் முத்தம் கொடுத்தார்.

    மேலும், இந்த விஷயத்தை வெளியே கூறினால் தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டினார்.

    எனது விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட மேனேஜர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இது குறித்து அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரித்தனர். இதில், பெண்ணிடம் தவறாக நடந்தது உறுதியானது.

    இதையடுத்து அயனாவரம், பழநி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜாவை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அத்துடன் அவர் வேறு பெண்கள் யாரிடமாவது இப்படி நடந்து கொண்டுள்ளாரா என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    பணிபுரியும் இடத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!