Connect with us

    பட்டா பெயர் மாற்றம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளர்..!

    Bribe

    Tamil News

    பட்டா பெயர் மாற்றம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளர்..!

    செஞ்சியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    Bribe

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சக்கராபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.

    இவரது மகன் ஜோசப்(வயது 40).

    இவர் கவரை கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனையை அளந்து பட்டா மாற்றம் செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக அவர், செஞ்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் பிரிவில் வட்ட நில அளவை சார் ஆய்வாளராக பணியாற்றி வரும் அன்புமணி(வயது 35) என்பவரை அணுகினார்.

    அப்போது பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று ஜோசப்பிடம், நில அளவை சார் ஆய்வாளர் அன்புமணி கூறியதாக தெரிகிறது.

    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தார் ஜோசப்.

    இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை ஜோசப் அன்புமணியிடம் கொடுத்துள்ளார்.

    அப் போது, மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர்.

    இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!