Tamil News
ஆடைகளை உருவி, வெளியே அடித்து துரத்திய கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி..!
ஆடைகளை கழட்டி விட்டு நிர்வாணமாக வீட்டுக்கு வெளியே தள்ளி விட்டதால் கணவன் மீது ஆவேசம் கொண்டிருக்கிறார் மனைவி.
கணவனின் பனியனை எடுத்து கழுத்தை இறுக்கி கணவனை கொலை செய்திருக்கிறார். சென்னையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.
சென்னையில் ராயபுரத்தில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார் சரவணன். அவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சரவணன் தினமும் குடித்துவிட்டு வந்து முத்துலட்சுமி இடம் தகராறு வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
நேற்று காலையிலேயே குடிபோதையில் இருந்த சரவணன் முத்துலட்சுமி இடம் தகராறு வளர்த்திருக்கிறார்.
தஞ்சாவூரில் இருக்கும் உனது சொத்தை பிரித்து பணத்தை வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி முத்துலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவரை அடித்து துன்புறுத்தி ஆடைகளை கழற்றிவிட்டு வீட்டுக்கு வெளியே நிர்வாணமாக தள்ளியிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துலட்சுமி, போதையில் இருந்த கனவன் சரவணனின் பணியனையே எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார்.
பின்னர் சரவணனின் தம்பிக்கு போன் செய்து, உங்க அண்ணன் மாரடைப்பால இருந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்.
இதில் சந்தேகப்பட்ட சரவணன் தம்பி போலீசுக்கு புகார் அளிக்க, போலீசார் வந்து சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து முத்துலட்சுமியிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதைய டுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
