Connect with us

    கொடுத்த கடனை திருப்பி கேட்ட பேராசிரியரை, புஷ்பா வீட்டுக்கு அழைத்து சென்ற பெண்; பின்னர் நடந்த சோகம்..!

    Fraud womans

    Tamil News

    கொடுத்த கடனை திருப்பி கேட்ட பேராசிரியரை, புஷ்பா வீட்டுக்கு அழைத்து சென்ற பெண்; பின்னர் நடந்த சோகம்..!

    சென்னையில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட பேராசிரியரை பெண்ணுடன் சேர்த்து வைத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Fraud womans

    சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) .

    இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன.

    அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற பெண் மூலம் ராதா (40) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

    ராஜேந்திரனும் ராதாவும் நன்றாகவே பேசி வந்துள்ளனர்.

    காலப்போக்கில் பேராசிரியரிடம் பணம் பார்க்க நினைத்த ராதா தான் சொந்தமாக தொழில் செய்ய போவதாகக்கூறி ராஜேந்திரனிடம் நான்கரை லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் பெற்றுள்ளார்.

    கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டபோது ராதா சரிவர பதில் கூறாமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.

    இதனால், ராதா மீது 2019-ம் ஆண்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு ராதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    இதை அறிந்த ராதா, தொலைபேசி மூலம் பேராசிரியரை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டார்.

    பின்னர் பணத்தை திரும்பத் தருவதாக கூறி, கொடுங்கையூரில் உள்ள தனது தோழி புஷ்பா வீட்டுக்கு அழைத்தார்.

    அதை நம்பி அங்கு சென்ற பேராசிரியருக்கு குடிநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

    அதை குடித்த பேராசிரியர் மயங்கினார்.

    உடனே பேராசிரியரின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, லட்சுமி என்ற பெண்ணுடன் அவரை சேர்த்து வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்தார்.

    பின்னர், அந்த வீடியோவை காட்டி இனிமேல் பணத்தை திருப்பி கேட்டால், இந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பேராசிரியரை ராதா மிரட்டினார்.

    இதுபற்றி உடனடியாக பேராசிரியர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மற்றும் அவரது தோழி புஷ்பா(49), இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த லட்சுமி(30), அவருடைய கணவர் முருகன்(40) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!