Connect with us

    பழுதடைந்ததால், வீட்டின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரில், ஹெல்மெட் இன்றி பயணம் செய்ததாக அபராதம் விதித்த போலீசார்..!!

    Tamil News

    பழுதடைந்ததால், வீட்டின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரில், ஹெல்மெட் இன்றி பயணம் செய்ததாக அபராதம் விதித்த போலீசார்..!!

    சிவகங்கை அருகே இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து வீட்டின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததாக 200 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்.

    இவர் அப்பகுதியில் இன்டர்நெட் சேவை மையம் நடத்தி வருகிறார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுதடைந்துள்ளது.

    அதனால் அதனை உபயோகப்படுத்தாமல், தனது வீட்டின் ஓரமாக நிறுத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது செல்போன் எண்ணிற்கு ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவல்துறையிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

    அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டியவரும், பின் அமர்ந்திருந்தவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறி, பழுதடைந்து கிடந்த இருசக்கரவாகனத்துக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், குறுந்தகவல் குறித்து காவல்துறையிடம் முறையிட்டுள்ளார்.

    இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து ஓரமாக கிடக்கும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!