Viral News
4 மனைவிகள் இருந்தும் ஆசை அடங்காமல், 5- வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போலீஸ் ஏட்டுவுக்கு நேர்ந்த சோகம்…!!
ஆந்திராவில் 4 மனைவிகள், இருப்பதை மறைத்து, 5ஆவது திருமணம் செய்ய முயற்சித்த தலைமைக் காவலர் மீது நான்காவது மனைவி பு.கார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில், அப்பலராஜூ என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
அவருக்கும், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
தொடர்ந்து, அப்பலராஜூ பத்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பத்மாவிற்கு அப்பலராஜூ நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து, அப்பலராஜூ குறித்து பத்மா விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 3 திருமணம் நடந்திருப்பது தெரிந்தது.
இந்நிலையில், அப்பலராஜூ ஏற்கனவே மூன்று திருமணம் முடித்து, இருந்த நிலையில், தன்னை ஏ.மாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டதையும் தெரிந்து கொண்ட பத்மா, அப்பலராஜூடன் த.கரா.றில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரை திருமணம் செய்ய அப்பலராஜூ தயாராகியுள்ளார்.
இதனையடுத்து அப்பலராஜூ மீது காவல் நிலையத்தில் பு.காரளித்துள்ளார் பத்மா.
இது குறித்து போலீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
