Tamil News
புகார் கொடுக்க போன திருமணம் ஆன பெண்ணுடன் கள்ளக்காதல் புரிந்த போலீஸ் எஸ்.ஐ; விபரம் தெரிந்து கணவர் செய்த பகீர் செயல்..!
காதல் கணவர் குடித்து விட்டு வந்து அடித்ததால் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதால் அந்த போலீஸ் எஸ்.ஐ. அந்த பெண்ணை மடக்கி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.
இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்திருக்கிறார்.
அவர் கடைசியாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் எஸ். எஸ். காலனியைச் சேர்ந்தவர் கணேசன்.
இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்துள்ளார்.
இவர் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு ஒரு பிள்ளை இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணேசன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து எஸ். எஸ். காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கணேசனின் மரணத்தில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது .
அவரின் தற்கொலைக்கு காரணம் போலீஸ் எஸ். ஐ என்பது தெரிய வந்திருக்கிறது.
கணேசனும் அந்த போலீஸ் எஸ்ஐ போன் கால் ஆடியோ வெளியாகி இருக்கிறது.
அந்த ஆடியோவில், என் மனைவி என் மீது புகார் கொடுக்க வந்துள்ளார். புகார் கொடுக்க வந்தவரை இப்படி பண்ணலாமா?
நான் குடித்துவிட்டு வந்து என் மனைவியை அடித்தது உண்மைதான். அதற்குத்தான் அவள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாள்.
ஆனால் அவளிடம் நீங்கள் நெருங்கி பேசி இருக்கிறீர்கள்.
அளவுக்கு அதிகமாக நெருங்கி பழகியிருக்கிறீர்கள். எனக்கு எல்லாமே தெரியும்.
உங்களுக்கு இன்று வரைக்கும் அவளிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.
நீங்கள் அவளை பயன்படுத்திக் கொண்டு விட்டீர்கள். எல்லாத்தையும் என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது. அசிங்கமாக இருக்கிறது.
தயவு செய்து அவளுக்கு இனி மேல் மெசேஜ் எதுவும் அனுப்ப வேண்டாம் என்று சொல்ல, சரிப்பா இனிமேல் உன் குடும்பத்தை தொந்தரவு செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடு என்கிறார்.
அந்த எஸ்ஐ.
இந்த ஆடியோ விவகாரம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கவனத்திற்கு சென்றிருப்பதால் அவர் இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்ட எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
