Cinema
உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற பேனர் வைத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!
உதயநிதி ஸ்டாலின் நடித்து இன்று வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற பேனர் வைத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஆர்ட்டிக்கள்15’.
இந்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உதயநிதி ஸ்டாலினுடன், தான்யா ரவிசந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
சமீபகாலமாக நடைபெற்று வரும் சமூக ரீதியான பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்குப்படுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தின் காட்சிகள் பீஜியம் மனதை வருடும் விதமாக இருந்து வருகிறது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக உதயநிதி, நீதிக்காக போராடும் காவலராக நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து தமிழகம் முழுதும் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர், இளைஞர் அணியினர், தி.மு.க.வினர் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர்.
அந்த வகையில் இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வரும் கதிரவன், பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கையை நீட்டி மேடையில் மைக் முன் பேசியவாறும், போலீஸ் சீருடையில் உதயநிதி இருக்கும் போட்டோக்களுடன் டிஜிட்டல் விளம்பர பேனரை வைத்திருந்தார்.
தகவலறிந்த, பெரம்பலுார் போலீசார் இந்த விளம்பர பேனரை அந்த இடத்தில் இருந்து அகற்றினர்.
இது குறித்து, விசாரித்ததில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து கதிரவன் தனது சொந்த செலவில் டிஜிட்டல் பேனர் வைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ஏட்டு கதிரவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலுார் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
