Viral News
“என் சொந்தக்காரங்க உட்காரணும்; எழுந்திரும்மா” – பேருந்தில் கஷ்டப்பட்டு இடம் பிடித்த பெண்ணை தனது அதிகார மமதையால் மிரட்டிய போலீஸ் அதிகாரி..!
உறவினர் ஒருவருக்கு பேருந்தில் இடம் கிடைக்காததால் பேருந்து சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை எழுந்திருக்குமாறு மிரட்டிய புதுச்சேரி ஏஎஸ்ஐ வீடியோ வைரலாகியுள்ளது.
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தில் ஒரு தம்பதி இடம்பிடித்து அமர்ந்துள்ளனர்.
அப்போது உருளையன்பேட்டை காவல் நிலைய ஏஎஸ்ஐ முருகேசன் பேருந்தில் தனது உறவினர் ஒருவருக்காக சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அதற்கு அப்பெண் மறுத்துள்ளார். மேலும், இப்பேருந்தில் முன்பதிவு இல்லை.
பின், எதற்காக நான் எழுந்திருக்க வேண்டும் என்றும் ஏஎஸ்ஐ முருகேசனிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு தான் ரிசர்வேஷன் செய்துள்ளதாக ஏஎஸ்ஐ முருகேசன் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் பிஎன்ஆர் நம்பரை காட்டுங்கள் எனக்கூறிய அப்பெண்ணை தகாத வார்த்தையில் ஏஎஸ்ஐ முருகேசன் திட்டியுள்ளார்.
அவருக்காக பேருந்து நடத்துனரும் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த நிகழ்வுகளை செல்போன் மூலம் படம்பிடித்த நபரிடம் இருந்து செல்போனை ஏஎஸ்ஐ முருகேசன் பறிக்க முயன்றார்.
காவல் நிலையத்துக்கு போன் செய்து ஜீப்பை அனுப்ப அவர் உத்தரவிட்டார்.
பின்னர் அந்த இளைஞர் மற்றும் சீட் தர மறுத்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு இன்ஸ்பெக்டர் பாபுஜி முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
ஏ.எஸ்.ஐ ஒருவர் தனது சொந்த விவகாரத்திர்காக பொது மக்களிடம் காட்டமாக பேசி, குற்றவாளி போல் அவர்களை ஜீப்பில் ஏற்றி சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
