Connect with us

    “என் மீதே எச்சில் துப்புவியா?” சாலையில் துப்பிய எச்சில் தன் மீது பட்டதற்காக பஸ் கண்டக்டரை டார் டாராக கிழித்த போலீஸ்காரர்..!

    Policeman attacked conductor

    Tamil News

    “என் மீதே எச்சில் துப்புவியா?” சாலையில் துப்பிய எச்சில் தன் மீது பட்டதற்காக பஸ் கண்டக்டரை டார் டாராக கிழித்த போலீஸ்காரர்..!

    சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் எச்சில் துப்பிய போது அவ்வழியாக சென்ற காவலர் மீது பட்டதாக கூறி அரசுப் பேருந்து நடத்துனரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Policeman attacked conductor

    சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ஜான் லூயிஸ்.

    இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மாநகர பேருந்து நடத்துநர் பாலச்சந்திரன் எச்சிலை துப்பியுள்ளார்.

    அப்பொழுது எச்சில் காவலர் லூயிஸ் மீது பட்டுள்ளது.

    இதனால் பாலச்சந்திரனுடன் காவலர் லூயிஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்பொழுது அவர் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர், பாலசந்திரனை முகத்தில் கைகளால் சரமாரியாக குத்தினார்.

    இதில் பாலசந்திரனுக்கு முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும், அவரின் உதடுகள் கிழிந்து ரத்தம் கொட்டியது.

    ஆனாலும், அவரை விடாமல் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த பொதுமக்கள் தாக்குதல் நடத்திய காவலரிடம், போலீசாக இருந்தாலும் பொது இடத்தில் வைத்து இப்படி அடிக்கலாமா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலறிந்து வந்த சைதாப்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.

    தாக்குதலில் காயமடைந்த பாலச்சந்திரனை  மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டது.

    இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து ஊழியர் பாலச்சந்திரன் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போக்குவரத்து ஊழியரைத் தாக்கிய காவலர் லூயிஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!