Connect with us

    “டேய், அவ என் ஆளு” – கள்ளக்காதலிக்காக நடந்த சண்டையில் டிரைவரை கொலை செய்த போலீஸ்காரர்..!

    Kavitha ravi

    Tamil News

    “டேய், அவ என் ஆளு” – கள்ளக்காதலிக்காக நடந்த சண்டையில் டிரைவரை கொலை செய்த போலீஸ்காரர்..!

    Kavitha ravi

    கவிதா-ரவி

    சென்னை, கே.கே. நகர், விஜய ராகவபுரம், காமராஜ் தெருவை சேர்ந்தவர் ரவி (26).

    இவர், எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில், கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரின் மனைவி ஐஸ்வர்யா (23) இவர், கே.கே. நகர், சத்யா கார்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில், வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களின் குழந்தை ஜெசிகா (2).

    இந்த நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ரவி மாயமானார்.

    அதேபோல, ரவி வீட்டருகே குடியிருந்த கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் செந்தில் குமாரும் கடந்த மாதம் 31ம் தேதி, வீட்டை காலி செய்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரவியை கோயம்பேடு போலீசார் அழைத்து சென்றதாக தெரிந்து, ஐஸ்வர்யா அங்கு சென்றார்.

    ஆனால், போலீசார், நாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து, ஐஸ்வர்யா கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவியை தேடி வந்ததாக சொல்லப்படுகிறது.

    இதனிடையே, செந்தில் குமார், செம்பியம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

    ஆனால், அவர் பணிக்கு செல்லாமல் தலைமறைவாகி இருந்தார்.

    இந்த கோணத்தில் கேகே நகர் போலீசார் நடத்திய விசாரணையில், ரவியும், செந்தில்குமார் ஆகியோர் நட்பாக பழகி வந்துள்ளனர்.

    ஆனால், கடந்த 15 நாட்களுக்கு முன்னர், ரவிக்கும், செந்தில் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    போலீசாருக்கு, செந்தில்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது,

    இதற்கிடையில், கணவரை கண்டுபிடித்து தருமாறு, ஐஸ்வர்யா, கோர்ட்டில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில், மதுராந்தகம் , பழையனூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆண் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    உடனே அங்கு சென்று பார்த்தபோது, உடல் துண்டாக்கப்பட்டு, எரித்து கொல்லப்பட்டது தெரிந்தது.

    போலீசார் இதுகுறித்து விசாரித்த நிலையில்,
    கே.கே.நகரில் ரவி என்பவர் மாயமாகி பல நாட்கள் ஆனது தெரியவந்தது.

    பின்னர் தகவலின் பேரில், கே.கே.நகர் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், அவர் ரவி என தெரியவந்தது.

    கள்ளக்காதல் விவகாரத்தில் ரவி கொல்லப்பட்டதுடன் இந்த வழக்கில் காவலர் செந்தில் குமார் உள்ளிட்ட ஆறு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து செந்தில் குமாரின் கள்ளக்காதலி கவிதா என்பவர் சிக்கினார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.

    அதில் கவிதா கூறியதாவது, செந்தில் குமாருடன் நான் குடும்பம் நடத்தினேன். அதன்பின் ரவிக்கும், எனக்கும் பழக்கமானது.

    இது செந்தில் குமாருக்கு தெரிந்து ரவியுடன் சண்டை போட்டார்.

    பின்னர், சம்பவத்தன்று, ரவியை சமாதானம் பேசுவதற்கு, செந்தில் குமார் வீட்டிற்கு அழைத்தார்.

    அங்கு மது அருந்திய ரவி, போதையில், அவள் என்ன உன் மனைவியா என சண்டை போட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளி, கழுத்தில் கால் வைத்து மிதித்து கொன்றார்.

    பின்னர், அவரின் உடலை மூட்டையாக கட்டி, வீட்டை காலி செய்வது போல் வேனில் ஏற்றி, பழையனூர் நெடுஞ்சாலையில் வைத்து, உடலை துண்டாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்தோம் என வாக்குமூலம் கொடுத்தார்.

    கவிதாவை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள செந்தில் குமார் உள்ளிட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!