Connect with us

    தோசையில் கொத்து புரோட்டா செய்து தர சொல்லி தகராறு செய்து உணவக உரிமையாளரின் மண்டையை உடைத்த போலீசார்…!!

    தோசை கொத்து பரோட்டா

    Tamil News

    தோசையில் கொத்து புரோட்டா செய்து தர சொல்லி தகராறு செய்து உணவக உரிமையாளரின் மண்டையை உடைத்த போலீசார்…!!

    ஈரோடு அருகே கொத்து புரோட்டா கேட்டு உணவகத்தில் தகராறு செய்த போலீசார் இருவர் உணவக உரிமையாளரின் மண்டையை உடைத்ததால் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    தோசை கொத்து பரோட்டா

    இந்த விவகாரத்தில் போலீசார் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவர், அதே பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி ருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு உணவகத்திற்கு வந்த இருவர் கொத்து புரோட்டா கேட்டுள்ளனர்.

    அதற்கு தோசை மட்டும்தான் உள்ளது என பரோட்டா இல்லையென கடையின் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

    இதில், ஒருவர் தான் போலீசாரின் தம்பி எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் ஆயுதப்படை காவலர் உமர் பாருக்கை அழைத்து ஆஷிக் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர் உமர் பாருக் உணவக உரிமையாளருடன் சண்டையிட்டுள்ளார்.

    இதில், காவலர் தாக்கியதில் உரிமையாளர் ஈஸ்வரனின் மண்டை உடைந்துள்ளது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதில் உரிமையாளர் ஈஸ்வரன் அளித்த புகாரில் பேரில் ஆயுதப்படை காவலர் உள்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரோட்டா கேட்டு இரவில் தகராறு செய்ததாக காவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!