Sports News
பிரக்ஞானந்தாவை கண்டுக்காமல் கார்ல்சனை கொண்டாடிய அமெரிக்க ஊடகங்கள்; போட்டி நடந்தப்போ வச்சு செஞ்ச பிரக்ஞானந்தா; வைரலாகும் புகைப்படம்..!
கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார்.
இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த ஒரு வாரமாக இந்த தொடர் நடந்து வருகிறது.
சுமார் 1.6 மில்லியன் டாலர்களை பரிசாக வழங்கும் மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பெரிய நிகழ்வு இதுவாகும்.
எட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் (ஆல்-பிளே-ஆல்) ஒவ்வொரு வீரரும் மற்ற 7 வீரர்களுடன் ஒரு முறை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் வீரர்களுக்கு 7,500 டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும், போட்டியின் முடிவில் 100,000 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் போனஸாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டி தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தா.
இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் தொடரின் வெற்றியாளராக மேக்னஸ் கார்ல்சன் அறிவிக்கப்பட்டார்.
பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
நடப்பாண்டில் 3வது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
நேற்று போட்டி நடைபெறுவதற்கு முன்பாக அவரை பார்க்க ஏகப்பட்ட செய்தியாளர்கள் காத்து இருந்தனர்.
அவரின் ரசிகர்கள் பலர் காத்து இருந்தனர். ஏன் சக செஸ் வீரர்கள் கூட அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று காத்து இருந்தனர்.
இதனால் அவர் ஹீரோ போல அங்கே எல்லோராலும் கொண்டாடப்பட்டார்.
ஆனால், அவர் நின்று கொண்டு இருந்த அதே காரிடாரில் பிரக்ஞானந்தாவும் தன்னுடைய பயிற்சியாளருடன் நின்று பேசிக் கொண்டு இருந்தார்.
செய்தியாளர்கள் யாரும் பிரக்ஞானந்தாவை கண்டுகொள்ளவில்லை. சக வீரர்கள் கூட சென்று விசாரிக்கவில்லை.
செஸ் உலகில் பிரக்ஞானந்தா பிரபலம் என்றாலும்.. அவரை அடையாளம் காணாமல்.. இவர்கள் கார்ல்சனை மட்டும் பேட்டி எடுத்துக்கொண்டு இருந்தனர்.
ஆனால் போட்டி நடந்த அன்று யாரை பத்திரிகையாளர்கள் கொண்டாடினார்களோ அதே கார்ல்சனை வீழ்த்தி அங்கு இருந்த மீடியாக்களை திரும்பி பார்க்க வைத்தார் பிரக்ஞானந்தா.
எந்த மீடியா தன்னை கவனிக்கவில்லையா அதே மீடியா முன் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றார்.
தன்னை யாரும் கண்டுகொள்ளாத போதும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரக்ஞானந்தா ஆடி வென்ற விதம் பலரையும் கவர்ந்தது.
