Tamil News
வளர்ப்பு பூனைக்கு வளைக்காப்பு நடத்தி அழகு பார்த்த தம்பதி; குவியும் பாராட்டுக்கள்..!!
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் உமாமகேஸ்வரன்-சுபா தம்பதியினர்.
இவர்கள் அவர்களது வீட்டில் இரண்டு பிரீசியன் இன பூனைகளை வளர்த்து வந்தனர்.
அந்த பூனைகளுக்கு ஜிரா மற்றும் ஐரிஸ் என பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில் திடீரென்று பெண் பூனைகளான ஜீரா மற்றும் ஐரிஸ்க்கு வயிறு பெரிதானது.
இதனையடுத்து பூனைகளின் உரிமையாளர்கள் அவற்றை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டினர்.
அந்த பூனைகளை பரிசோதித்ததில் அவை கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் பூனையின் உரிமையாளரிடம் ஜீரா மற்றும் ஐரிஸ் பூனைகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த செய்தியினை கேட்டு மகிழ்ந்த அவர்கள், பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல் தங்களது பூனைகளுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டனர்.
இந்நிலையில் ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்பு நிலையத்தில் வைத்து அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர்.
பெண்களுக்கு செய்வது போலவே செல்லப்பிராணிகளை அலங்கரித்து வளையல்கள் அணிவித்து கேக் வெட்டி பலன்கள் ஸ்வீட் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த பூனைகளுக்கு சீர்வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், செல்லப் பிராணிகளுக்கான சாக்லேட்டுகள் வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.
இதுகுறித்து பூனையின் உரிமையாளர்கள் கூறுகையில், “மனிதர்களுக்கு எவ்வாறு வளைகாப்பு நடத்தப்படுகிறதோ, அதேபோல கர்ப்பமாக இருக்கும் எங்கள் செல்லப்பிராணிகளை நாங்கள் வளைகாப்பு நடத்த திட்டமிட்டோம்.
அதன்படி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடத்தினோம்” என்று கூறினர்.
இதற்கு முன்னர் ஒரு சிலர் தாங்கள் வளர்க்கும் நாய்க்கு 5 வகை உணவு தயார் செய்து, வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ட்ரெண்ட் செய்த நிலையில், தற்போது பூனைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது.
