Connect with us

    கரு எப்படி கலைந்தது? மனைவியிடம் தகராறு செய்த கணவர்; இறுதியில் நடந்த சோகம்..! 😳😳👇👇

    Pregnant woman

    Tamil News

    கரு எப்படி கலைந்தது? மனைவியிடம் தகராறு செய்த கணவர்; இறுதியில் நடந்த சோகம்..! 😳😳👇👇

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார்.

    இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார்.

    இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழ்ச்செல்வி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    Pregnant woman

    இந்நிலையில் திடீரென கரு கலைந்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோபத்தில் தமிழ்ச்செல்வி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனையடுத்து கரு எப்படி கலைந்தது என சென்றாயசாமி தனது மனைவியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது கோபமடைந்த சென்றாயசாமி தமிழ்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ் செல்வி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துவிட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!