Tamil News
108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்; குவியும் வாழ்த்துக்கள்..!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரசவ வலியுடன் 108 வாகனத்தில் மருத்துவமனை நோக்கி சென்ற பெண்ணுக்கு வழியிலேயே இரட்டை குழந்தை பிறந்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரோஜா வயது.26.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரோஜா, பிரசவ வலியால் துடித்ததால் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபு ரோஜாவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில், ரோஜாவுக்கு வலி அதிகமானதால்108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு மருத்துவ உதவியாளர் மணி ரோஜாவுக்கு பிரசவம் பார்த்தார்.
அவருக்கு ஓட்டுநர் பிரபு உதவிகள் புரிந்தார்.
இந்நிலையில் ரோஜாவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
பின்பு புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோஜாவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரோஜாவை அனுப்பி வைத்தனர்.
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ரோஜாவுக்கு பிரசவம் பார்த்த டிரைவர் பிரபு மற்றும் உதவியாளர் மணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
