Viral News
கல்லூரி விடுதியில் சக மாணவிகள் 60 பேர் குளிப்பதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பி வைத்த மாணவி..!
பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 60 மாணவிகளை குளித்துக் கொண்டிருந்தபோது வீடியோ எடுத்து கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள முன்னணி பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகக்தில் பல மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அதே விடுதியில் தங்கி படிக்கும் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சக மாணவிகள் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்து அதை தனது ஆண் நண்பர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார்.
இவ்வாறாக 50 முதல் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோவை அனுப்பியுள்ளார்.
அந்த ஆண் நண்பர் அனைத்து வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக தெரியவருகிறது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபடவே, காவல் துறையினரின் விசாரணையில் பெண்ணின் பகீர் செயல் அம்பலமானது.
அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பல மாணவிகளின் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், 2 மாணவிகள் மனதுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அதில் ஒரு மாணவி உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொரு மாணவி உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
