Connect with us

    3 மாதங்களுக்கு ஒரு முறை மனைவியுடன் தனி அறையில் இருக்க சிறை கைதிகளுக்கு அனுமதி; கொண்டாட்டத்தில் கைதிகள்..!

    Prison

    Viral News

    3 மாதங்களுக்கு ஒரு முறை மனைவியுடன் தனி அறையில் இருக்க சிறை கைதிகளுக்கு அனுமதி; கொண்டாட்டத்தில் கைதிகள்..!

    மனைவியுடன் தனி அறையில் 2 மணி நேரம் இருக்க சிறை கைதிகளுக்கு அனுமதி அளிக்கும் சலுகையை பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.

    Prison

    பஞ்சாப் சிறையில் உள்ள கைதிகளுக்கான சலுகை தொடர்பாக பஞ்சாப் சிறைத் துறை தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது.

    பஞ்சாப் சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது.

    வரும் செவ்வாய்க்கிழமை முதல் இது நடைமுறைக்கு வர இருக்கிறது.

    நபா மாநகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறைச்சாலை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை ஆகிய இரு சிறைச்சாலைகளில் இது அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும்.

    கொடூர குற்றங்களைப் புரிந்தவர்கள், ரவுடிகள், அபாயகரான கைதிகள், பா.லியல் குற்றம் புரிந்தவர்கள் ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது.

    சிறைகளில் நீண்ட காலமாக இருக்கும் நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறை வளாகத்தில் உள்ள குளியலறையுடன் கூடிய தனி அறையில் ஒரு கைதி தனது மனைவி/கணவருடன் 2 மணி நேரம் செலவிட அனுமதி அளிக்கப்படும்.

    இத்தகைய அனுமதியின் மூலம், சிறைக் கைதிகளிடம் நன்னடத்தை அதிகரிக்கும். அதோடு, அவர்களின் திருமண பந்தமும் வலுப்படும்.

    இத்தகைய அனுமதி 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

    ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்று தந்தால் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சிறைக் கைதிகளுக்கு இதுபோன்ற ஒரு சலுகையை அளிக்கும் முதல் மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!