Connect with us

    மனைவியுடன் தாம்பத்ய உறவு மேற்கொண்டு, குழந்தை உருவாக, ஆயுள் தண்டனை கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

    Court ordered

    Viral News

    மனைவியுடன் தாம்பத்ய உறவு மேற்கொண்டு, குழந்தை உருவாக, ஆயுள் தண்டனை கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

    ராஜஸ்தான் மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு 15 அவரது மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற்கொண்டு குழந்தை பெற்று கொள்ள 15 நாட்கள் நீதிமன்றம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    Court ordered

    ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தலால் (வயது 34). திருமணமான நிலையில் 2018 ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அஜ்மீரில் உள்ள மத்திய சிறையில் நந்தலால் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனால் அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை.

    இதற்கிடையே கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக்கொள்ள தான் விரும்புவதாகவும், தனது கணவருக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி அஜ்மீர் கலெக்டரிடம் மனு மூலம் கோரிக்கை வைத்தார்.

    கடந்த டிசம்பர் மாதம் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி பெற்றுக்கொள்ள உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

    மேலும், அவர் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்பதும், மேலும் தண்டனை பெற்ற குற்றவாளியை மனைவியுடன் குழந்தை பெற்றெடுக்க தாம்பத்ய உறவில் ஈடுபடவிடாமல் தடுப்பது அந்த மனைவியின் உரிமையை மோசமாக பாதிக்கும்’ என கூறியது.

    மேலும், மனைவியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதி நந்த லாலுவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!