Connect with us

    “இந்த காலத்துல இப்படி ஒரு மாமியாரா.?? இவர மாதிரி இருக்கணும்” – வியக்க வைக்கும் ஒரு மாமியாரின் செயல்; குவியும் பாராட்டுக்கள்..!!

    Kamaladevi with daughter in law

    Viral News

    “இந்த காலத்துல இப்படி ஒரு மாமியாரா.?? இவர மாதிரி இருக்கணும்” – வியக்க வைக்கும் ஒரு மாமியாரின் செயல்; குவியும் பாராட்டுக்கள்..!!

    ராஜஸ்தான் மாநிலம் பதேபூர் ஷேகாவதி என்னும் பகுதியில் வசித்து வருபவர் கமலா தேவி (kamaldevi). இவரது இளைய மகன் பெயர் சுபம்.

    கிர்கிஸ்தான் நாட்டில், டாக்டருக்கு படித்திருந்த சுபமுக்கும், சுனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணமான சில மாதங்களில் சுமன் ஒரு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அந்த சமயத்தில், பட்டப்படிப்பு படித்து வந்த சுனிதா, கணவரின் எதிர்பாராத மரணத்தால், நிலை குலைந்து போனார்.

    கணவரை இழந்ததால் தனது மருமகளின் வாழ்க்கை கெட்டு விடக்கூடாது என நினைத்த மாமியார் கமலா தேவி மருமகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக முயற்சி எடுத்தார்.

    மருமகளை எதைப்பற்றியும் கவலைப்பட விடாமல் தொடர்ந்து படிக்க வைத்தார்.

    மேலும், சுனிதாவை போட்டி தேர்வுகளை எழுதவும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

    மாமியாரின் ஆதரவு சுனிதாவுக்கு கிடைத்ததால் போட்டித் தேர்வுகள் எழுதினார். அவர் மேற்கொண்ட முயற்சியும் அவருக்கு கை கொடுத்தது.

    போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற சுனிதாவிற்கு அரசு பள்ளிக் கூடம் ஒன்றில், ஆசிரியை பணி கிடைத்தது.

    சுரு என்னும் மாவட்டத்தில் ஆசிரியையாக, சுனிதா தற்போது பணிபுரிந்து வருகிறார்.

    மருமகள் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகும், தன்னுடைய கடமையை மாமியாரான கமலா தேவி நிறுத்தவில்லை.

    தனது மருமகளுக்கு இரண்டாவதாக முகேஷ் என்ற வரனை பார்த்து திருமணம் செய்தும் கொடுத்துள்ளார்.

    Kamaladevi with daughter in law

    தன்னுடைய மருமகளுக்கு ஒரு சிறந்த தாயாகவும், அதே வேளையில், மறுமணம் பற்றிய விஷயத்தில், சமூகத்திற்கு ஒரு முன் மாதிரியாகவும் கமலாதேவி இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இது பற்றி பேசும் கமலா தேவி, ‘என் மகன் சுமன், சுனிதாவை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து விட்டு, தான் விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தான்.

    நாங்கள் சுனிதாவை பற்றி விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றோம்.

    அப்போது, பொருளாதார ரீதியாக, நல்ல நிலையில் அவர்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டோம்.

    அப்படி இருந்தும், அவர்கள் வரதட்சணை தர முன் வந்தார்கள். ஆனால், நாங்கள் அதனை நிராகரித்து விட்டோம். திருமணமாகி எங்களின் வீட்டிற்கு வந்த பிறகு, பக்குவப்பட்ட பெண்ணாக நடந்து கொண்டாள்’ என கமலா தேவி தெரிவித்துள்ளார்.

    கமலா தேவியின் மூத்த மகன் ரஜத் பங்காரா பேசுகையில், ‘என் சகோதரன் சுபம் இறந்த பிறகு, சுனிதாவை, எங்கள் வீட்டில் பிறந்த குழந்தை போலவே எனது தாய் பாவித்தார்.

    சுனிதாவும், அவருக்கு கீழ்படிந்து அன்பாக நடந்து கொண்டார்’ என கூறியுள்ளார்.

    சமூகத்தில் ஒரு மாமியாருக்கான அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்த மாமியார் கமலாதேவியை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!