Connect with us

    “குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கு நீங்க அலைய தேவையில்லை” – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

    Ration card

    Lifestyle

    “குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கு நீங்க அலைய தேவையில்லை” – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!

    பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை நடைபெரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Ration card

    இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

    பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜூன்-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

    குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!