Politics
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காத வங்கி அதிகாரிகள்; வருத்தம் தெரிவித்தது ஆர்பிஐ (RBI)…!
தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் இதற்கு மரியாதை செய்யும் வகையில் அனைவரும் எழுந்து நிற்பது வழக்கம்.
ஆனால், சென்னையில் உள்ள ஆர்பிஐ (RBI)அலுவலகத்தில் நடந்த 73வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து கீதம் பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், தமிழக அரசிடம் ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
இதற்கு பலர் தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து ரிசர்வ் வங்கி அலுவலர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழக அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழக நிதியமைச்சரும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இன்று தலைமைச் செயலகத்தில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம். சாமி நேரில் சந்தித்தார்.
அப்போது குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது ஆர்பிஐ அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கு வருத்தம் தெரிவித்தார்.
