Connect with us

    “அடப்பாவமே! கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு, அதுக்குள்ள இப்படியா” – புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

    Recently married coupke

    Tamil News

    “அடப்பாவமே! கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு, அதுக்குள்ள இப்படியா” – புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!

    விழுப்புரம் அருகே பாஸ்தா என்ற உணவை சாப்பிட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Recently married coupke

    செஞ்சி அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகள் பிரதீபா (22).

    அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (22) வெல்டிங் வேலை செய்து வருகிறார்.

    ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர்.

    இதற்கு இருவர் வீட்டிலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 13ம் தேதி பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு அன்னியூரில் வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு, மாலை வீட்டிற்கு வந்தபோது திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஒயிட் பாஸ்தா என்ற உணவை வாங்கி பிரதீபா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு வந்தபோது, பிரதீபா வாந்தி எடுத்துள்ளார்.

    தொடர்ந்து  அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

    இதனையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு  பிரதீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரதீபா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகே பிரதீபா சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    பிரதீபா இருதய நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    எனினும், பிரதீபாவின் தந்தை பழனிவேல், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கஞ்சனுார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!