Connect with us

    அடப்பாவமே..! நெல்சன் படமா இப்படி..?? தளபதி விஜயின் பீஸ்ட் (Beast) படத்தின் முழு விமர்சனம்…!

    Beast

    Cinema

    அடப்பாவமே..! நெல்சன் படமா இப்படி..?? தளபதி விஜயின் பீஸ்ட் (Beast) படத்தின் முழு விமர்சனம்…!

    சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது பீஸ்ட் (Beast) திரைப்படம்.

    Beast

    கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு டார்க் காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி பிளஸ் ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.

    பீஸ்ட் படம் எப்படி இருக்கு என்பதை இங்கே விரிவாக அலசுவோம்.

    Beast Movie

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

    ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

    கோலிவுட் வட்டாராமே எதிர்பார்த்து கொண்டிருந்த ‘பீஸ்ட்’ படம் இன்று அதிகாலை வெளியாகியுள்ளது.

    ராஜஸ்தானில் குழந்தையின் பலூன் ஒன்று அதன் கையைவிட்டு பறக்க, அந்த பலூனை விஜய் எடுத்துக் கொடுக்கும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது.

    அப்போது திடீரென ஏற்படும் பயங்கரவாத தாக்குதலில் பறந்து பறந்து விஜய் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்கிறார்.

    அப்போது எந்த குழந்தைக்கு பலூன் எடுத்து கொடுத்தாரோ அந்த குழந்தை எதிர்பாராமல் இறந்து விடுகிறது.

    இதனால் விரக்தி அடையும் விஜய் ‘ரா’வில் இருந்து வெளியேறுகிறார்.

    அதன் பிறகு சென்னை வந்து விடிவி கணேஷ் நடத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

    அங்கு பூஜா, ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலரும் பணிபுரிய படம் காமெடியாக செல்கிறது.

    இந்த நேரத்தில் விஜய் உள்பட அவரது நிறுவனத்தில் உள்ள அனைவரும் மால் ஒன்றுக்கு செல்ல, கூர்கா படம் போல அந்த மாலை பயங்கரவாதிகள் ஹைஜாக் செய்கின்றனர்.

    சாதாரண பொது ஜனங்கள் முதல் அமைச்சரின் மனைவி குழந்தைகள் என பெரும்பாலானோர் இந்த மாலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

    ரா ஏஜெண்ட்டாக பணிபுரிந்த தளபதி விஜய்யும் இதற்குள் இருந்து எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.

    இது மட்டும் இல்லாமல் படத்தில் இன்னும் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. ‌‌

    தளபதி விஜய் வழக்கம் போல இந்த படத்தில் தன்னுடைய மாசான நடிப்பைக் கொடுத்து மிரட்டியுள்ளார்.

    டயலாக்குகள் திரையரங்கை தீப்பிடிக்க வைக்கின்றன. டான்ஸ் பட்டையைக் கிளப்பியுள்ளார்.

    அவருக்கும் பூஜா ஹெக்டே இடையேயான கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. பூஜா ஹெக்டே விஜய்க்கு நிகராக டான்ஸில் தூள் கிளப்புகிறார்.

    மேலும் படத்தில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன், கிங்ஸ்லி யோகி பாபு என அனைவரும் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

    யோகி பாபு மற்றும் பலரை வைத்து டார்க் காமெடியில் பட்டையைக் கிளப்பியுள்ளார் நெல்சன்.

    அனிருத்தின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கிறது.

    ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க எடிட்டிங் கன கச்சிதமாக அமைந்துள்ளது.

    இயக்குனர் நெல்சன் வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து விஜய்க்காக மாஸ் காட்சிகளை வைத்து மிரட்டியுள்ளார். ஆக்ஷன் காட்சிகள் அதிர வைக்கின்றன.

    படத்தின் பிளஸ்:
    1. தளபதி விஜய், பூஜா ஹெக்டே என படத்தில் நடித்தவர்கள் நடிப்பு.

    2. வசனங்கள்

    3. ஆக்சன் சீக்வென்ஸ்

    4. இன்டர்வல் பிளாக்

    5. விறுவிறுப்பு குறையாத திரைக்கதை

    படத்தின் மைனஸ்:
    1. வழக்கமான சில லாஜிக் தவறுகள்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!