Tamil News
மைல் கல்லுக்கு படையல் வைத்து ஆயுத பூஜை கொண்டாடிய சாலை பணியாளர்கள்..!
சாலையோர மைல் கல்லுக்கு படையல், பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வீடுகள் நிறுவனங்களில் உள்ள தொழிற்கருவிகள், விவசாய கருவிகள், வாகனங்களுக்கு பூஜை செய்து பொதுமக்கள் ஆயுத பூஜையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் ஒப்பிடமங்கலம் அருகே சாலையோர மைல் கல்லுக்கு படையல் இட்டு பூஜை செய்து சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை கொண்டாடினர்.
அதேபோல் கோயமுத்தூரில் முக்காலி , சிறுவாணி செல்லும் சாலையில் உள்ள மைல் கல்லுக்கு மாலை அணிவித்து வாழைமரம் கட்டி வாழை இலையில் படையலிட்டு பூஜை செய்துள்ள சம்பவம் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மைல் கல்லுக்கு படையலிட்டு வாழைமரம் கட்டி ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
