Connect with us

    இந்திய பணக்கார பெண்களில் முதலிடம் பிடித்தார் ரோஷ்னி நாடார்; சொத்து மதிப்பு 84330 கோடியாம்..!!

    Roshni nadar

    Viral News

    இந்திய பணக்கார பெண்களில் முதலிடம் பிடித்தார் ரோஷ்னி நாடார்; சொத்து மதிப்பு 84330 கோடியாம்..!!

    பணக்கார இந்திய பெண்களின் பட்டியலில், முதல் இடத்தை HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தக்க வைத்துள்ளார்.

    Roshni nadar

    2021-ல் கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்டு, ’கோட்டக் ப்ரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)’ 2021க்கான இந்தியாவின் டாப் பணக்காரப் பெண்கள் (Richest self -made woman) பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், முதல் இடத்தை HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தக்க வைத்துள்ளார்.

    அவரது சொத்து மதிப்பு 54 விழுக்காடு அதிகரித்து 84,330 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

    அதில், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அழகு சார்ந்த பிராண்டான நைக்காவைத் தொடங்குவதற்காக தனது முதலீட்டு வங்கிப் பணியை விட்டு விலகிய ஃபல்குனி நாயர், 57,520 கோடி நிகர மதிப்புடன் சுயமாக வளர்ந்த பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ளார்.

    59 வயதான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டில் 963 சதவீதம் அதிகரித்துள்ளது.

    மேலும் ஒட்டுமொத்தமாக இரண்டாவது பணக்காரப் பெண்மணியாகவும் உள்ளார்.

    HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடாரின் மகளான 40 வயது மல்ஹோத்ராவுக்கு அடுத்த இடத்தை ஃபல்குனி நாயர் பிடித்துள்ளார்.

    பயோகானின் கிரண் மஜும்தார்-ஷாவின் சொத்து மதிப்பு 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

    29,030 கோடி ரூபாய் சொத்துக்களுடன் நாட்டின் மூன்றாவது பணக்காரப் பெண்மணியாக கிரண் மஜும்தார்-ஷா திகழ்கிறார்.

    ஆனால், இவர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முதல் 100 இடங்களுக்குள் வருவதற்கான சொத்து வரம்பு, முந்தைய 100 கோடி ரூபாயிலிருந்து 300 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் முதல் 10 இடங்களில் இடம்பெறுவதற்கான சொத்து வரம்பு 6,620 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.

    டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இருந்து 25 பேரும், மும்பையை சேர்ந்த 21 பேரும் ஹைதராபாத்திலிருந்து 12 பேரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!