Connect with us

    கேரளாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்ய ஜோடியை (Russia pair) குடிபோதையில் தாக்கிய சேட்டன்கள்; ஆனாலும், கருணையுடன் அவர்களை மன்னித்த ரஷ்ய ஜோடி..!!

    Russia pair attacked by mob in kerala

    Tamil News

    கேரளாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்ய ஜோடியை (Russia pair) குடிபோதையில் தாக்கிய சேட்டன்கள்; ஆனாலும், கருணையுடன் அவர்களை மன்னித்த ரஷ்ய ஜோடி..!!

    கேரளாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்ய ஜோடி குடிபோதையில் தாக்கியது கும்பல் ஒன்று. ஆனாலும், அவர்களை மன்னித்து, எங்களுக்கு கேரளா பிடித்திருக்கிறது, மீண்டும் வருவோம் என அந்த ஜோடி கூறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Russia pair attacked by mob in kerala

    கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படுகிறது கேரளா. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்கள் நிறைய உள்ளன.

    கேரளாவின் இயற்கை எழில் கண்டு ரசிக்க லட்சக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் கேரளாவுக்கு படையெடுப்பது வழக்கம்.

    குறிப்பாக, ஆலப்புழா, கொச்சி மற்றும் கோவளம் உள்ளிட்ட இடங்களுக்கு விசிட் செய்கின்றனர்.

    அந்த வகையில், ரஷிய நாட்டினை சேர்ந்த டேனியல் (வயது 42) என்பவர், அவரின் பெண் தோழியான கேத் (வயது 26) என்பவனுடன் கொல்லத்திற்கு சுற்றுலா வந்துள்ளார்.

    இவர்கள் இருவரும் படகு துறையில் சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், இவர்களுடன் டெல்லியை சேர்ந்த ஜோடியும் இருந்துள்ளனர்.

    அப்போது, அங்கு வந்த உள்ளூர் கும்பலொன்று ரஷிய ஜோடியை தாக்கி மிரட்டியுள்ளது.

    அவர்களை அங்குள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை கண்டிக்கவே, அவர்களையும் அடிக்க பாய்ந்துள்ளது அந்த கும்பல்.

    இதனால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வருவதற்குள் அக்கும்பல் தப்பி சென்றுள்ளது.

    அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரஷிய ஜோடியை தாக்கிய பரவூரை சேர்ந்த சரத், ஸ்ரீராம், பிரசாந்த் ஆகியோரை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் உறுதியானது.

    இவர்கள் மீது IPC – 307 – ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விஷயம் தொடர்பாக ரஷியாவை சேர்ந்த டேனியல் கூறுகையில், “இந்தியாவுக்கு நான் 9 தடவைகள் வந்துள்ளேன்.

    ஆனால், கேரளாவுக்கு தற்போது தான் முதல் முறையாக வந்துள்ளேன். இங்குள்ள சுற்றுலா தளங்கள் மனதை மயக்குகிறது. உணவுகள் சுவையாக உள்ளது.

    எங்களுக்கு நடந்த கசப்பான நிகழ்வை நான் மறந்துவிட்டேன். எங்களை தாக்கியவர்களை மணித்துவிட்டேன்.

    வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் கேரளாவுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!