Tamil News
ஆம்புலன்ஸ் வாங்க ரூ.19 லட்சம் நிதியுதவி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்..!
ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கொரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு கொரோனா நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.5 கோடி தமிழக அரசுக்கு இந்நிறுவனம் வழங்கியிருந்தது.
மேலும், பள்ளிகூடங்கள் கட்டுவது, ஏழை எளியோர்க்கு உதவுவது உள்ளிட்ட பல சமூக பணிகளில் இந்நிறுவனம் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளது.
அந்த வகையில் மின் மயானம் ஒன்றுக்கு ரூ.19 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாங்க நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சியை அடுத்த பாசூர் கிராமத்தில், ஈரோடு சங்கமம் டிரஸ்ட் சார்பில், எரிவாயு மயானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மயானத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க, ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.19 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அதற்கான காசோலையை சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி. துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோர், சங்கமம் டிரஸ்டின் துணைத்தலைவர் எ.பி.ஜெகதீசன், பொருளாளர் பி.எஸ். இளங்கோ, செயலாளர் பிகேபி அருண் ஆகியோரிடம் வழங்கினர்.
