Connect with us

    சலூன் கடையில் முடித்திருத்தம் முடிந்த பின் காசு தர மறுத்த இளைஞர்; கடைக்காரர் செய்த பகீர் செயல்..!

    Saloon shop

    Tamil News

    சலூன் கடையில் முடித்திருத்தம் முடிந்த பின் காசு தர மறுத்த இளைஞர்; கடைக்காரர் செய்த பகீர் செயல்..!

    வேலூரில் சலூன் கடையில் முடித்திருத்தம் செய்ய வந்த வட மாநில இளைஞர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Saloon shop

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த காயத்துடன் ஒருவர் சாலையில் கிடந்தார்.

    இதைக் கண்ட அப்பகுதி மக்கள் விருத்தம்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள அவரிடம் இருந்த ஆதார் அட்டையை காவல்துறையினர் பார்த்த போது அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபனி சரணியா என்பது தெரியவந்தது.

    இதனிடையே, அந்த நபர் சிகிச்சை பலனின்றி கடந்த 1 ஆம் தேதி உயிரிழந்தார்.

    அபனி சரணியா ஏன் வேலூர் வந்தார், அவரை யார் கொலை செய்தது என்பது மர்மமாக இருந்தது.

    இதுகுறித்து விருத்தம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் உயிரிழந்த நபர் அசாம் மாநிலத்தவர் என்பதால் அவர் ரயில் மூலமாக தான் காட்பாடி வந்திருக்க வேண்டும் எனக் கருதினர் போலீஸார்.

    இதனால் ரயில் நிலையத்தில் அருகில் இருந்த கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது 22ம் தேதி காலை காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்திருக்கிறார்.

    இதனை பார்த்த போலீஸார் அடுத்தடுத்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தனர்.

    அப்போது அங்குள்ள சலூன் கடைக்குள் அபனி சரணியா சென்றுள்ளார். அரைமணி நேரத்துக்கு பிறகு அவர் வெளியே ஓடி வந்திருக்கிறார்.

    அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    இதை அடுத்து அந்த சலூன் கடைக்கு சென்ற போலீஸார் கடையின் உரிமையாளர் விஜயராகவன் என்பவரிடம் அசாம் இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர்.

    இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

    இதையடுத்து, விஜயராகவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அபனி சரணியாவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

    இந்த சம்பவடம் குறித்து விஜயராகவன் கூறுகையில், சம்பவ தினத்தன்று காலையில் முதல் ஆளாக அபனி சரணியா எனது கடைக்கு வந்தார்.

    அவருக்கு முடிதிருத்தம் செய்துவிட்டேன். அதன் பிறகு அவரிடம் பணம் கேட்ட போது, பணம் இல்லை என்பது போல சைகையில் கூறினார்.

    அவர் பேசும் மொழி எனக்கு புரியாததால் பணத்தை தருமாறு அவரிடம் கறாராக கேட்டேன்.

    அப்போது என்னை அவர் கீழே தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரத்தில் கையில் இருந்த சவரக் கத்தியை வைத்து அவரது கழுத்தை அறுத்தேன்.

    இதையடுத்து அவர் வெளியே ஓடிவிட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என அவர் வாக்குமூலம் அளித்தார்.

    அதன் அடிப்படையில் போலீஸார் விஜயராகவனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!