World News
“இந்த ஹோட்டல்லயா சமோசா சாப்பிட்டோம்”- கடந்த 30 ஆண்டுகளாக கக்கூஸில் சுடச்சுட சமோசா தயாரித்து வழங்கிய உணவகம்; நொந்து போன வாடிக்கையாளர்கள்..!
சவூதி அரேபியா நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா மற்றும் இதர உணவுப் பொருட்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஹோட்டல் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு இந்த உணவகத்தில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
ஜெட்டா நகராட்சி அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த உணவகத்தினர் சமோசா உட்பட பல தின்பண்டங்களை கழிவறையில் தயாரிப்பது தெரிய வந்தது.
மேலும் சோதனை செய்தபோது, அங்கு காலாவதியான உணவுப்பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றில் சில இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அந்த இடத்தில் சிறு பூச்சிகள், எலிகள் மற்றும் உணவுப்பொருட்களை கொறித்து உண்ணும் வண்டுகள் காணப்பட்டன
அதில், அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
அவற்றில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருந்தன. பூச்சிகளும், எலிகளும் உணவகத்தில் ஓடி, ஆடியபடி இருந்தன.
இதனை தொடர்ந்து அந்த உணவகம் பூட்டப்பட்டு உள்ளது.
இதே போன்று கடந்த ஜனவரியில் ஜெட்டா நகரில் உள்ள ஷவர்மா ஹோட்டலில் எலி ஒன்று இறைச்சியை சாப்பிட்டு கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது.
அந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளத்தில் கொந்தளித்து உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதனையடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் மூடினர்.
