Politics
“ரம்மி விளம்பரத்தில் ஏன் நடிக்கிறீங்க?” – செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஷாக் பதில் தந்த சரத்குமார்; ஆடிப்போன ரசிகர்கள்..!
இன்று திருச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி ( online rummy) விளம்பரத்தில் ஏன் நடிக்கிறேன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று திருச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது, அவரிடம் ஆன்லைன் ரம்மி விளம்பர படத்தில் நடிகர் சரத்குமார் நடித்தது சர்ச்சையாகி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆவேசமாக பதில் கூறிய சரத்குமார், “ஆன்லைனில் ரம்மி மட்டுமா ஆடுகிறார்கள்? கிரிக்கெட் உள்ளிட்ட நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன.
இது எல்லாமே சூதாட்டம் தான். மொத்தமாக அனைத்தையும் நிறுத்தினால் தான் இதிலிருந்து தப்பிக்க முடியும்.
குடிப்பழக்கம் குடும்பத்தை கெடுக்கும். ஆனால், எல்லோரும் குடிக்காமலா இருக்கிறார்கள்? குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மது அருந்தாதீர்கள் என்று நானும் சொல்லித்தான் பார்க்கிறேன். இதுபோல புகைப்பழக்கங்கள் உடல் நலத்திற்கு கேடு. ஆனால், இதை தயாரிப்பதை ஏன் யாரும் நிறுத்தவில்லை.
இந்த உலகில் அனைத்துமே இருக்கிறது. அதை பார்த்து நீங்கள் கெட்டுப்போகாத அளவிற்கு மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
உலகில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. நல்லவற்றை எடுத்துக்கொண்டு தீயவற்றை விட்டு விலகுங்கள் என்று கூறுகிறோம்.
சுய கட்டுப்பாடோடு இருந்தால் அவர்கள் கடையை மூடி விட்டு சென்று விடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்
