Connect with us

    தீப்பெட்டிக்குள் அடைக்கும் வகையில் சேலை நெய்த நெசவாளர்; குவியும் பாராட்டுக்கள்..!!!

    Viral News

    தீப்பெட்டிக்குள் அடைக்கும் வகையில் சேலை நெய்த நெசவாளர்; குவியும் பாராட்டுக்கள்..!!!

    தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த நல்லா விஜய் என்ற கைத்தறி நெசவாளர் தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் வகையில் சேலை ஒன்றை நெய்துள்ளார்.

    இதை அவர் தெலுங்கானா அமைச்சர்கள் கே.டி. ராமா ராவ், சபிதா இந்திராரெட்டி, ஸ்ரீனிவாஸ் கவுடா, எர்ரபெல்லி தயாகர் ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று அறிமுகம் செய்தார்.

    மேலும், இந்த சேலையை நல்லா விஜய் அமைச்சர் சபிதா ரெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

     

    தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் இந்த சேலையை கைகளால் நெய்வதற்கு 6 நாட்கள் ஆனதாகவும் இயந்திரத்தால் நெய்யும் போது 2 நாட்களில் நெய்துவிடலாம் என்றும் நல்லா விஜய் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2011 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பராக் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது அவரது மனைவிக்கு பரிசளிப்பதற்காக தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையை செய்து கொடுத்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல் ஒபாமாவுக்கு தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் அளவிலான சால்வையையும் செய்து கொடுத்திருந்தார்.

    60 கிராம் எடை கொண்ட அந்த சேலை 4.5 மீட்டர் நீளமுடையது. சால்வை 30 கிராம் எடை கொண்டது 2 மீட்டர் நீளம் உடையது.

    மேலும், நல்லா விஜய் கடந்த 2017 ஆம் ஆண்டு தீப்பெட்டியில் அடைக்கக் கூடிய 16 முழ சேலை மற்றும் சால்வை ஆகியவற்றை தயாரித்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக உண்டியலில் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!