Connect with us

    ஒழுங்காக தலை முடியை திருத்தி வா என ஆசிரியர் கூறியதற்காக பீர் பாட்டிலால் ஆசிரியரை குத்த முயன்ற மாணவன்; வெளியான அதிர்ச்சி காணொளி..!

    School student

    Tamil News

    ஒழுங்காக தலை முடியை திருத்தி வா என ஆசிரியர் கூறியதற்காக பீர் பாட்டிலால் ஆசிரியரை குத்த முயன்ற மாணவன்; வெளியான அதிர்ச்சி காணொளி..!

    ஒழுங்காக தலை முடியை திருத்தி வா என ஆசிரியர் கூறியதற்காக பீர் பாட்டிலால் ஆசிரியரை குத்த முயன்ற மாணவனின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    School student

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவன், தனது தலைமுடியை சரியாக வெட்டாமல் ஸ்டைலாக அலங்காரம் செய்து வந்துள்ளார்.

    இதனை கவனித்த தலைமை ஆசிரியர் மாணவனை கண்டித்து இருக்கிறார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளான்.

    மேலும், பள்ளியின் நாற்காலிகளை உடைத்து, அலுவலகத்தை சூறையாடி இருக்கிறான்.

    மேலும், இதனை கண்டிக்க வந்த ஆசிரியர்களை அவமதித்து பேசி, ஆசிரியையை வாடி, போடி என பேசி ரகளை செய்துள்ளான்.

    நான் ரௌடிதான் எனவும் திமிருடன் பேசி தாக்கி இருக்கிறான்.

    இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மாணவனின் தாத்தாவும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டார்.

    இந்த விஷயம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!