Sports News
“இந்தியாவை நீங்கள் வீழ்த்தினால் உங்கள் நாட்டு பையனை மணந்து கொள்வேன்” – ஜிம்பாப்பே அணியினரை உசுப்பேத்தி விடும் பாகிஸ்தான் நடிகை..!
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் கடந்த வாரம் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றால் வெளியேறிவிடும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்தியா-ஜிம்பாப்வே டி20 போட்டி வரும் 6ம் தேதி நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி பரபரப்பாக டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று சேஹர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவை 850க்கும் மேற்பட்ட பயனர்கள் லைக் செய்துள்ளனர். மேலும், 49 முறை ரீடுவீட் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நடிகை இந்தியாவிற்கு எதிராக டுவீட் செய்வது இது முதல்முறை அல்ல.
கடந்த வாரம் வங்காள தேசத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியின்போது, “இந்தியா தோற்க வேண்டும், இந்தியா தோற்க வேண்டும்” என்று தொடர்ந்து ட்வீட் செய்து வந்தார்.
இதனால், இந்திய ரசிகர்கள் சேஹர் ஷிவாரியை கலாய்த்து பதில் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் சில நெட்டிசன்கள், “அப்படியானால், உங்கள் முழு வாழ்க்கையையும் நீங்கள் எப்படி தனியாக வாழ போகிறீர்கள்..” என்றும், “பங்களாதேஷை இந்தியா தோற்கடித்தால் உங்கள் டுவிட்டர் கணக்கை நீக்க வேண்டும்..” என்றும் பதிவிட்டுள்ளனர்.
