Cinema
ஷ்…ப்பா..என்ன அழகுடா; செதுக்கி வெச்ச சிலை போல..! சுஜிதா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து உருகிப் போன ரசிகர்கள்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் புகழ் பெற்று வருபவர் சுஜிதா.
சுஜிதாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம்.
சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வரும் இவர் பாண்டியன் 2 சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர், ஆரம்பத்தில் இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதன்பின் அல்டிமேட் ஸ்டார் தல அஜித்தின் வாலி படம் உட்பட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆனால், அதில் கூட கிடைக்காத புகழ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கிடைத்துள்ளது.
இந்த சீரியல், கூட்டுக் குடும்பத்தை பற்றிய கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
எனவே தான், இந்த சீரியல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்,சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘என் கணவருக்காக’ தொடரை 90ஸ் கிட்ஸ் மறந்து இருக்கமாட்டீர்கள்.
அதில் சந்தியாவாக நடித்திருப்பார். பெரும் வரவேற்பை பெற்ற அந்த தொடருக்கு பின் சுஜிதாவுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த அண்ணி என்ற விருதை வென்றார் நடிகை சுஜிதா.
இந்நிலையில் நடிகை சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.
அந்த வகையில், தற்போது டைட்டான மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
