Connect with us

    55 வயதான தந்தையின் 5-வது திருமணத்தை தடுத்து நிறுத்திய 7 பிள்ளைகள்…!!

    Children stopped marriage

    Viral News

    55 வயதான தந்தையின் 5-வது திருமணத்தை தடுத்து நிறுத்திய 7 பிள்ளைகள்…!!

    தந்தையின் 5-வது திருமணத்தை அவரின் 7 பிள்ளைகளும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Children stopped marriage

    உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள ஏழு பிள்ளைகள் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் தந்தையின் முயற்சியை தடுத்துள்ளனர்.

    லக்னோ உத்திர பிரதேசத்தின் சீதாபூரில் வசிக்கும் சபி அஹ்மது(55).

    இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அஹமது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக 5 வது திருமணம் செய்து கொள்ள விரும்பினார்,

    எனவே அவர் தனது மனைவிகள் அனைவரையும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பினார்.

    மேலும் அவரது இரண்டாவது மனைவி மட்டுமே குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று 5வது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.

    திட்டமிட்டப்படி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

    இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவரின் ஏழு குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் திருமண இடத்திற்குள் நுழைந்து திருமணத்தை தடுத்துள்ளனர்.

    திருமண மண்டபத்தில் அந்த குழந்தைகள் தாங்கள் யார் என்பதும் குறித்தும் மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

    இதனால், அங்கு மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

    இதையடுத்து அந்த இடத்தில் கூடியிருந்த ஏராளமான மக்கள், திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகனை சரமாரியாக தாக்கியதால், மணமகன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்துள்ளார்.

    இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் கூறுகையில்,

    இந்த சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பிறகு, நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்தோம்” என்றார்.

    அந்த நபர் முதல் மற்றும் 2-வது திருமணம் செய்துகொண்டவர்களை விவாகரத்து செய்துள்ளார்.

    மேலும், 3வது மற்றும் 4-வது திருமணம் செய்து கொண்டவர்களை ஒரு சில காரணங்களை கூறி பிரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

    தனது தந்தை மாதாந்திர செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், அவரது ஐந்தாவது திருமணம் குறித்து அறிந்ததும், நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் அந்த ஏழு குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!