Uncategorized
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அருணாசலப் பிரதேச மாநிலத்தில் சுமார் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது காமேங் செக்டர். இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாகக் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது.
இந்த நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட 7 ராணுவ வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவில் சிக்கி மாயமானார்கள்.
அதையடுத்து, ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினார்கள்.
இந்நிலையில் ராணுவ வீரர்கள் இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று இந்திய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு நடடிவடிக்கைள் முடிவுக்கு வந்துள்ளன.
பிப்ரவரி 6ம் தேதி இமயமலையின் உயரமான கமெங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 7 இந்திய இராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.
மீட்புப் பணிகளில் உதவ சிறப்புக் குழுக்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்டன, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டது.
தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
துரதிஷ்டவசமாக, அனைவரும் சிறப்பான முயற்சிகள் மேற்கொண்ட போதும், 7 பேரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சம்பவம் நடந்த பகுதியில் கடும் பனிபொழிந்து வருகிறது.
7 வீரர்களின் உடல்களும் பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து அருகில் உள்ள இராணுவ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது
