Connect with us

ஆடு முட்டியதில் உயிரிழந்த பெண்; ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்; எங்கு தெரியுமா..!

Sheep

World News

ஆடு முட்டியதில் உயிரிழந்த பெண்; ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்; எங்கு தெரியுமா..!

ஒரு பெண்ணை செம்மறி ஆடு ஒன்று முட்டியதில், அப்பெண் உயிரிழந்தார். ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்ட சம்பவம் தெற்கு சூடானில் அரங்கேறியுள்ளது.

Sheep

தெற்கு சூடான் நாட்டில் செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின் என்ற 45 வயது முட்டியது.

இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அப்பெண்ணின் நெஞ்செலும்புகள் உடைந்து போனது தெரிய வந்தது.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்த போது, ஆடு குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது.

வாயில்லா ஜீவனாக இருந்தாலும், தப்பு தப்புதான் என நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட விலங்கின் உரிமையாளர் மீது தான் வழக்கு தொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இங்கோ, உரிமையாளர் நிரபராதி என்றும், இந்த ஆடுதான் கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

தற்போது இந்த ஆடு ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுள்ளது.

ஆட்டின் உரிமையாளருக்கு தண்டனை கிடையாதா என்றால், ஆட்டை பிரிவது தான் உரிமையாளருக்கு தண்டனை என்று கூறிய கோர்ட்டு, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஐந்து பசுமாடுகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஆட்டிற்கு சிறைதண்டனை விதிக்கப்படும் நிகழ்வை இப்போதுதான் கேட்கிறோம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இச்செய்தி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top
error: Content is protected !!