Connect with us

    திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி; குவியும் வாழ்த்துக்கள்..!

    Chinmayi with her baby

    Cinema

    திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் இரட்டை குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி; குவியும் வாழ்த்துக்கள்..!

    தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான பாடகி சின்மயி இரண்டு அழகிய குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.

    Chinmayi with her baby

    இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்து இரட்டையர்கள் பிறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல பிண்ணனி பாடகியாக இருப்பவர் சின்மயி.

    பின்னணி மட்டுமல்லாது டப்பிங் பேசுவதிலும் திறமையானவர், தமன்னா, சமந்தா போன்றவர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

    தனது மெல்லிய குரலால் பல ரசிகர்களை ஈர்த்தார்.

    இவரின் முதல் பாடலே ஆஸ்கர் நாயகன் ஏர்.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் தான்.

    முதல் பாடலே வேற லெவலில் ஹிட் அடிக்க, பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

    பின்னாளில் இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் வைரமுத்து இதை மறுத்தார்.

    இதனால் சின்மயி தரப்புக்கும், வைரமுத்து இடையே சண்டை நீடித்து வந்து கொண்டே இருந்தது.

    மீ டூ என்ற வார்த்தையும் பிரபலமானது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாகவும் சின்மயி குரல் கொடுத்து வருகிறார்.

    மேலும் பெண்கள் குறித்து குற்றச்சாட்டுகள், அல்லது அவதூறு செய்திகள் வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகிறார்.

    சமீபத்தில் 37 வயதில் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று ஒரு டாக்டர் கூற அவரை வறுத்து எடுத்துவிட்டார் சின்மயி.

    நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.

    பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

    மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தைகளின் பிஞ்சு விரல்களை ஷேர் செய்து எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகமே என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

    பாடகி சின்மயிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!