Viral News
“வீட்ல யாரும் இல்ல; வாங்க உல்லாசமா இருக்கலாம்” – ஆசையாய் அழைத்த இளம்பெண்; நம்பி சென்ற தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கேரளாவில் உல்லாசமாக இருக்கலாம் வாங்க என தொழிலதிபரை வீட்டிற்கு வரவழைத்து பணம், நகை பறித்த பெண் உட்பட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியை சார்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமும் இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்து வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இடையேயான பழக்கம் நெருக்கமானது.
இருவரும் தங்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட தகவல்களையும், அந்தரங்கங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தன்னுடைய கணவர் துபாயில் இருப்பதாகவும், தான் மட்டும் வீட்டில் நோய்வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருக்கிறேன்.
தனிமை என்னை வாட்டுகிறது. எனவே நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த தொழிலதிபரிடம் ஆசையாக பேசியுள்ளார்.
அதை நம்பிய தொழிலதிபர் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த இளம் பெண் கூறியபடி பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த பெண்ணின் வீடு அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்தது.
அவர் அந்த வீட்டுக்கு சென்றபோது ஒரு இளம்பெண் மட்டும் இருந்துள்ளதுள்ளர்.
ஆசையுடன் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க தயாரான போது திடீரென திடீரென ஐந்து நபர்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
மேலும் அந்த கும்பல் தொழிலதிபரை மிரட்டி அவரது ஆடைகளை களைந்து வீடியோ மற்றும் போட்டோக்களையும் எடுத்துள்ளனர்.
தங்களுக்கு பணம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
அவரது கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் அந்த கும்பல் கைப்பற்றியது.
இதன் பின்னர் கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் அவரை மிரட்டி உள்ளனர்.
கொடுங்கல்லூரில் உள்ள தன்னுடைய பிளாட்டுக்கு சென்றால் பணம் எடுத்து தருவதாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த கும்பல் அவரை கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றுள்ளது.
ஆனால் வழியிலேயே தொழில் அதிபர் காரிலிருந்து இறங்கி தப்பித்து பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்தில் சென்று நடந்த விவரங்களை கூறியுள்ளார்.
போலீசாரும் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் இன்ஸ்டா பிரபலம் கண்ணூரை சேர்ந்த கோகுல் தீப் இவரது மனைவி தேவ். கோட்டயம் பகுதியை சார்ந்த சரத் , திருச்சூரை சார்ந்த அஜித், வினய் மற்றும் ஜிஷ்ணு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கணவன் மனைவியான கோகுல் தீப், தேவ் தம்பதி ஒரு youtube சேனல் நடத்தி வருவதுடன், இன்ஸ்டாவிலும் மிகவும் பிரபலமாக வலம் வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
