Viral News
லிப் கிஸ் கொடுக்க முயன்ற போது திடீரென பாம்பு பிடி வீரரின் உதட்டை கவ்விய நாகப்பாம்பு; வெளியான வைரல் காணொளி..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம்.
அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது.
அந்த வகையில் நாகப்பாம்புக்கு நபர் ஒருவர் முத்தம் கொடுத்த போது அது அவரை கடித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தை பொம்மனகட்டேயை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது35).
இவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் நாகப் பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது.
இதை பார்த்த சந்தோஷ், பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்தார். அவர் வருவதற்குள், பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.
அங்கு வந்த பாம்பு பிடி வீரர் அலெக்ஸ் (32) புதருக்குள் இருந்த பாம்பை மிகவும் லாவகமாக பிடித்தார்.
அப்போது பாம்புக்கு முத்தம் தர முயன்றார். அப்போது பாம்பு, அவரது உதட்டில் திடீரென கொத்தியது.
இதையடுத்து வலியால் துடித்த அலெக்ஸ் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
