Connect with us

    பாம்புக்கடி; பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் உடல்நலம் தேறி வருகிறார்..!!

    Snake catcher Vava suresh

    Tamil News

    பாம்புக்கடி; பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் உடல்நலம் தேறி வருகிறார்..!!

    பாம்பு பிடிக்கையில், துரதிர்ஷ்டவசமாக நல்லபாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் (Vava suresh) தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

    Snake catcher Vava suresh

    கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேசுக்கு போன் தகவல் வந்தது.

    இதை தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர், குறிப்பிட்ட அந்த வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேசின் வலது காலில் கடித்தது.

    இதைகண்டு அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயக்கி விழுந்தார்.

    அதைதொடர்ந்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர், அவரை மேல்சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்த வாவா சுரேஷ் உடல்நலம் இப்போது தேறியுள்ளது.

    சுயநினைவுக்கு திரும்பியுள்ள அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைகள் அதிகரித்துள்ளது.

    அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவருக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மக்களவை எம்.பி. சசிதரூர் வாவா சுரேஷ் மீண்டு வரவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!