Viral News
ஓட்டலில் வாங்கிய பரோட்டாவில் பாம்பு தோல்; அதிர்ச்சியில் வாடிக்கையாளர் செய்த காரியம்…!
சமீபகாலமாக ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனால் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் கேரளா, காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், அதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
ஓட்டலில் பரோட்டா வாங்கிய பெண்மணி ஒருவர் வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்து பார்த்த போது அதில் பாம்பு தோல் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கேரளா, திருவனந்தபுரம், நெடுமங்காட்டுப் பகுகுயைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் பிரியா.
இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா வாங்கியுள்ளார்.
பரோட்டாவை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு வந்த ப்ரியா பரோட்டாவை பிரித்துப் பார்த்தார்.
அப்போது, பார்சலை கட்டியிருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து, நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தார்.
உடனடியாக அதிகாரிகள் விரைந்து வந்து பரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வை மேற்கொண்டார்கள்.
மேலும், ஓட்டலுக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதனையடுத்து, அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
