Connect with us

    இறந்த தந்தையை தனது திருமணத்தன்று சிலையாக வடிவமைத்து வணங்கிய மகன்..!

    Father statue

    Tamil News

    இறந்த தந்தையை தனது திருமணத்தன்று சிலையாக வடிவமைத்து வணங்கிய மகன்..!

    கொரோனாவால் உயிரிழந்த தந்தையை மெழுகு சிலை போல் வடிவமைத்து நெகிழ வைத்துள்ளார் அவரது மகன்.

    Father statue

    சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா, சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

    இவரது தந்தையான பன்னீர்செல்வம் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார்.

    தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்க்க வேண்டும் என அடிக்கடி பன்னீர்செல்வம் கூறுவது வழக்கமாம்.

    இதனால் தன்னுடைய திருமணத்தன்று தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணினார் ஆரோக்கிய இயேசு ராஜா.

    இதற்காக அச்சு அசலாக தந்தையை போன்றே மெழுகு சிலை ஒன்றை வடிவமைக்க ஆசைப்பட்டார்.

    இதற்கு 5 லட்ச ரூபாய் வரை செலவானது.

    அந்த சிலையை வீட்டில் வைத்து தினந்தோறும் வணங்கி சென்றார்.

    இதற்கிடையே ஆரோக்கிய இயேசு ராஜாவுக்கும் – ஜூலியட் லதா என்பவருக்கும் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது.

    திருமணத்தன்று மண்டபத்தின் இருக்கையில் தந்தையின் சிலையை அமர வைத்து திருமண ஜோடிகளுக்கு வரவேற்பு விழாவும் கோலாகலமாக நடந்தது.

    அப்போது பன்னீர்செல்வம் சிலையின் முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிபெற்றனர்.

    அதேபோல் உறவினர்களும் அந்த மெழுகு சிலை பார்த்து கண் கலங்கினர்.

    பின்னர் அனைவரும் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!