Viral News
87 வயது தாய் ஆசைப்பட்டதை பார்க்க மலையில் 1.5 கி.மீ தோளில் சுமந்து சென்ற மகன்கள்..!
12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தனது 87 வயது அம்மாவை 1.5 கிலோ மீட்டர் தோளில் தூக்கிக்கொண்டு மலையேறி அம்மாவிற்குக் காட்டிய இரண்டு மகன்களின் செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால் ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது.
இதனை அறிந்த அவரது மகன்களான ரோஜன் மற்றும் சுந்தரம் ஒரு திட்டம் போட்டுள்ளார்.
அதன் படி, தனது தாயாரின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர்.
அதன்படி தங்களது வீட்டிலிருந்து இடுக்கி மாவட்ட கள்ளிப்பாறைக்கு ஜீப் மூலம் சென்றனர் அவர்கள்.
அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது மலைப் பகுதியில் வாகனம் செல்லாது என்று.
உடனே இரண்டு மகன்களும் அம்மாவைத் தோளில் தூக்கிக்கொண்டு 1.5 கி.லோ நடந்தே மலையை ஏறியுள்ளனர்.
12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் அந்த பகுதியில் தற்போது பூத்துக்குலுங்குகிறது.
இந்த அரிய வகை மலரான நீலக்குறிஞ்சியை கண்டு களித்தார் முதாட்டி.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
