Viral News
4 கை, 4 கால்களுடன் பிறந்த குழந்தையின் ஆபரேசனுக்கு உதவி செய்த நடிகர் சோனு சூட்; குவியும் பாராட்டுக்கள்..!
பாலிவுட் நடிகர் சோனுசூட்
தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்.
இவர் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு பெரிய அளவில் உதவிகள் வழங்கி இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து ஆக்ஸிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிருக்கு போராடி வருவதாகவும், உதவி செய்யுமாறும் நடிகர் சோனுசூட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அன்று இரவு முழுவதும் போராடி அம்மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து 22 பேரின் உயிரை காப்பாற்றினார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடுகளை வாங்க காசு இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத வீடியோ வைரலானது.
உடனடியாக அவருக்கு டிராக்டர் வழங்கி உதவி புரிந்தார்.
இவ்வாறு சமூகத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
அந்த வகையில், 4 கை, 4 கால்களுடன் பிறந்த சிறுமியின் ஆபரேசன்க்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.
பீகார் கிராமத்தை சேர்ந்த சாமுகி குமாரி என்ற சிறுமி , பிறவியிலிருந்தே 4 கால், 4 கைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
அந்த சிறுமி குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதை அறிந்த நடிகர் சோனு சூட் அச்சிறுமிக்கு உதவி செ ய் ய முன்வந்தார்.
இதனையடுத்து, சூரத்தில் உள்ள மருத்துவமனையில் அச்சிறுமியை சோனு சூட் சேர்த்தார்.
கடந்த புதன்கிழமை சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சுமார் 7 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசனில் 2 கை, 2 கால்கள் நீக்கப்பட்டன.
தற்போது, சிறுமி சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார்.
