Connect with us

    தங்க இடமில்லாமல், ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்து உறங்கி வெறியுடன் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனை இளைஞர்…!!!

    Viral News

    தங்க இடமில்லாமல், ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்து உறங்கி வெறியுடன் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சாதனை இளைஞர்…!!!

    சாதாரணமாக நம்முடன் வாழ்பவர்கள் தம் விடாமுயற்சியால் சாதனையாளராவது வழக்கமான ஒன்றுதானே என்று நினைக்கலாம். வறுமை, நேரமின்மை, குடும்பச் சூழல் என அத்தனை தடைகளையும் உடைத்து இன்று தமிழருக்குப் பெருமை சேர்த்திருக்கும் சிவகுரு ஐஏஎஸ் நம் இளைய சமுதாயத்துக்கு ஒரு முன்னுதாரணம்.


    பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுரு, கடந்தாண்டு ஐஆர்எஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இந்தாண்டு அவர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் புனல்வாசலை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    இவரது அப்பா விவசாயத்தோடு, சொந்தமாக சிறிய அளவில் மர அ.று.வை மில் ஒன்றையும் நடத்தி வந்தார்.

    ஆனாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், ஏழ்மையான சூழ்நிலையிலேயே சிவகுருவின் குடும்பம் இருந்தது.

    ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்த இவர் ஐந்தாம் வகுப்புக்கு மேல் புனல்வாசல் புனித ஆரோக்கிய மேரி உயர்நிலைப்பள்ளியில் படித்தார்..

    12ம் வகுப்பில் 1093 மதிப்பெண் எடுத்தார். ஆனால், எஞ்சினியரிங் படிக்க விருப்பப்பட்ட என்னை கல்லூரியில் சேர்க்க இவரது தந்தையிடம் பண வசதி இல்லை.

    இருப்பினும், அவர் சக்திக்கு முடிந்த அளவுக்கு போராடி, இவரை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

    பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி எப்போதும் முதல் மாணவனாகவே வந்தார் சிவகுரு.

    பிறகு மர அ.று.வை மில்லில் வேலைக்கு சேர்ந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு அங்கு வேலை செய்த பிறகு, தந்தை பெரியார் அரசு கல்லூரியில் எஞ்சினியரிங் படிக்க இடம் கிடைத்தது.

    பிறகு, இவரது நண்பர் ஒருவர் தான் ஐஐடி-யில் சேருவது குறித்து இவருக்கு ஊக்கமளித்தார்.

    பணப் பிரச்சினை துரத்திய போதும், தன் கனவுகளைத் துரத்த மறக்கவில்லை சிவகுரு. ஐஐடியில் படிக்க விரும்பி, அதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு ஆயத்தமாகத் தொடங்கினார் அவர்.

    2011ம் ஆண்டு கல்லூரி நண்பர் ரூபன் உதவியுடன், சென்னையில் வார இறுதி நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.

    வார நாட்களில் கல்லூரிப் படிப்பு, வார இறுதி நாட்களில் சென்னையில் பயிற்சி வகுப்பு என வேலூருக்கும், சென்னைக்கும் மாறி மாறி அவர் அலையத் தொடங்கினார்.

    சென்னையில் அறை எடுத்து தங்கும் அளவிற்கு பணம் இல்லாததால், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட நேரம்போக, பரங்கிமலை ரயில்நிலையத்திலேயே தங்கினார் சிவகுரு. பிளாட்பாரத்திலேயே சுமார் நான்கு மாதங்கள் கழித்தார்.

    தீவிர பயிற்சி எடுத்து GATE-ல் நல்ல மதிப்பெண்கள் பெற்றார்.

    இதனால் M-tech படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், ஐஏஎஸ் படிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

    2016-ம் ஆண்டு நடந்த முதல்நிலை, மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐஆர்எஸ் பணிக்கு தேர்வானார். ஆனால் அவரது கனவு ஐஏஎஸ் பதவி மீதே இருந்தது.

    இவரின் விடா முயற்சியால் நான்காவது அட்டெம்ப்ட்டில் 101வது ரேங்க் பிடித்து ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்..

    Continue Reading
    To Top
    error: Content is protected !!