Connect with us

    காதலனுடன் பேச முடியாத விரக்தியில் நீட் தேர்வு பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு; கதறிய பெற்றோர்..!

    Neet exam training center student

    Tamil News

    காதலனுடன் பேச முடியாத விரக்தியில் நீட் தேர்வு பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு; கதறிய பெற்றோர்..!

    காதலனுடன் பேச முடியாத விரக்தியில், நீட் தேர்வு பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Neet exam training center student

    கோவை ஆர்.எஸ்.புரம் சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஸ்வேதா (19).

    இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அகாடமியில் நீட் தேர்விற்கான பயிற்சியை பெற்று வந்தார்.

    அதே பயிற்சி மைய விடுதியில் மதுரை மாவட்டம் பி.பி.குளத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் யோகேஸ்வரனும் (18) தங்கி படித்து வந்தார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகி றது.

    இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.

    இதில் யோகேஸ்வரனின் பெற்றோர் சாதியை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் அவர்களது காதல் தொடர்ந்தது.

    இதனால் யோகேஸ்வரனின் பெற்றோர், கோவை கொண்டையம்பாளையத்தில் உள்ள பயிற்சி மையத்துக்கு வந்து தங்களின் மகனை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அதன்பிறகு யோகேஸ்வரனிடம் பேச முடியாமல் ஸ்வேதா தவித்து வந்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஸ்வேதா பயிற்சி மைய விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்து விடுதி மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், 50க்கும் மேற்பட்ட காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலனுடன் பேச முடியாத விரக்தியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!